திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்து தெளிவு படுத்திய ஸ்டாலின்!! மாணிக்கம் தாகூர் ரியாக்ஷன்!!
By : Bharathi Latha
Update: 2026-02-12 08:30 GMT
தமிழக முதல்வர் ஸ்டாலின் India Today கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சி கூட்டணி பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.
அதில், ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்று காங்கிரஸுக்கும் நன்றாக தெரியும் என்றார். திமுக கூட்டணி நன்றாக இருக்கிறது. தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வலுவாகத் தொடரும் என்றும் கூறினார்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். மக்கள் முடிவு செய்வார்கள் . கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்று கூறியுள்ளார்.