'என் சாவுக்கு காரணம் தி.மு.க நிர்வாகி', கடிதம் எழுதி உயிரை துறந்த பெண் - நாளுக்கு நாள் அதிகமாகும் ஆளுங்கட்சி அட்டகாசம்
புதுக்கோட்டையில், என் சாவுக்கு தி.மு.க., நிர்வாகி தான் காரணம் என, கடிதம் எழுதி வைத்து விட்டு, பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவரது மனைவி கோகிலா. இவர்களுக்கும் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி துணை அமைப்பாளர் குமாருக்கும் இடையே நடைபாதை பிரச்னை இருந்தது. இது தொடர்பாக போலீசார், கோகிலா மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.
பின்னர் நிபந்தனையுடன் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், போலீசார் பொய் வழக்கு போட்டு மிரட்டுவதாக கடிதம் எழுதி வைத்து, கோகிலா நேற்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடிதத்தில் அவர் கூறியது;
தி.மு.க., கட்சியின் அராஜகம். கட்சி பவரை குமார் எங்களிடம் காண்பித்து விட்டார். என் சாவுக்கு குமார் மற்றும் அவரது மனைவி புகனேஸ்வரி தான் காரணம்.
நடைபாதை தொடர்பான வழக்கில், கணவனையும் இணைத்து விட்டதால், பயந்து போய் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை என கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பா.ஜ., மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் அறந்தாங்கி- பட்டுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Input From; Dinamalar