பிடிக்காதவர்களை எல்லாம் குண்டர் சட்டதில் உள்ளே போடலாமா? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கொடுத்த எச்சரிக்கை

Update: 2022-11-16 05:47 GMT

ஒருவரை தேவையில்லாமல் குண்டர் சட்டத்தில் கைது செய்தாலோ, சிறையில் அடைத்தாலோ, அது சட்டத்திற்கு புறம்பாக இருப்பதாக கண்டறியப்பட்டால், அரசுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஐகோர்ட் எச்சரித்துள்ளது. 

தென்காசி மாவட்டம் ஆத்துவழியை சேர்ந்த சுனிதா என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். 

அதில், என் கணவர் ஜெயராமன், நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு விவசாய நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக அமைதி வழியில் போராடினார்.

அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தென்காசி கலெக்டர் உத்தரவிட்டார். கணவர் நெல்லை சிறையில் அடைக்கப்பட்டார். என் கணவர் மீது போடப்பட்ட குண்டர் சட்ட கைது உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றார். 

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்தியாவில் 2011 முதல் 2021 வரை தமிழகம் தான் குண்டர் சட்ட கைது உத்தரவுகள் பிறப்பிப்பதில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

பொதுவான குற்றவாளிகள் மற்றும் விரும்பத்தகாதவர்களை கையாள காவல்துறையின் விருப்பமான வேட்டைக் களமாக இச்சட்டம் மாறியுள்ளது.இந்த ஆண்டில் மட்டும் 98 சதவீத கைது உத்தரவுகளை இந்த நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

குண்டர் சட்ட கைது உத்தரவு, தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகியுள்ளது. அதை மீறியதற்காக மனுதாரரின் கணவருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும்.

குண்டர் சட்ட கைது உத்தரவு சட்டத்திற்கு புறம்பாக இருப்பதாக வழக்குகளில் கண்டறியப்பட்டால், அரசுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர். 

Input From: Dinamalar 

Similar News