வெளிநாட்டு பாலங்களை விஞ்சும் டிசைன்: பாம்பன் புதிய ரயில் பாலத்தின் மாதிரி வீடியோ!

Update: 2022-12-31 02:04 GMT

பாம்பன் ரயில் பாலம் கட் டப்பட்டு நூறாண்டுகளுக்கு மேலான நிலையில், அதில் அடிக் கடி பழுது ஏற்பட்டதால் புதிய பாலம் கட்ட ரயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. 

2019-ல் பிரதமர் மோடி பூமி பூஜை செய்தார். கடல் சீற்றம், புயல் உள்ளிட்ட வானிலை மாற்றம் காரணமாகவும், கரோனா பரவல் ஊரடங்கு காரணமாகவும் கட்டுமானப் பணிகளை 2021-ம் ஆண்டுக்குள் முடிக்க முடிய வில்லை.

பாலத்துக்கான திட்டச் செலவு ரூ.535 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் 101 தூண்களுடன் கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகிறது.

பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள், படகுகள் செல்ல வசதியாக 27 மீட்டர் உயரத்துக்கு ஹைட்ராலிக் லிஃப்ட் மூலம் இயங்கக் கூடிய செங்குத்து தூக்குப் பாலம் அமைய உள்ளது. ரயில்வே நிர்வாகம் வரும் மார்ச் மாதத்துக்குள் புதிய பாலத்தின் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளது.

புதிய பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தின் மாதிரி வீடியோவை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது ட்விட்டர் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். 

Similar News