முன்னாள் தி.மு.க எம்.பி மஸ்தான் மரணத்தில் திடுக்கிடும் திருப்பம் - கொலை என மாறிய வழக்கு, என்ன நடந்தது?
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய துணைத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான மஸ்தான் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்பட்டநிலையில், அவரது உறவினர், கார் ஓட்டுநர் ஆகியோரே சேர்ந்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மஸ்தான் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. ஆனால் மஸ்தானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கார் ஓட்டுநர் இம்ரான் கூறினார்.
இதனையடுத்து இம்ரானிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தியதில் மஸ்தானுக்கும், இம்ரானுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது முதலில் உறவினர்கள் வாயிலாக கண்டுபிடிக்கப்பட்டது.
மஸ்தானின் சகோதரரின் மருமகன், கார் ஓட்டுநர் ஆகியோர் சேர்ந்து கொலை செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கொலை செய்த கும்பலை பிடித்து விசாரித்ததில், மஸ்தானை திட்டம் தீட்டி காரிலேயே வைத்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. மஸ்தானின் கையை இரண்டு பேர் இருக்க பிடித்துக் கொண்டும், முகத்தையும், வாயையும் பொத்தி மூச்சு திணற திணற கொலை செய்திருப்பதும் போலீசாரணை விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
Input From: Puthiyathalaimurai