மாமூல் கொடுக்காத பெண் வியாபாரி மீது தாக்குதல்: திமுக கவுன்சிலரின் கணவர் கைது!

Update: 2023-01-02 11:54 GMT

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் மோகனா. இவர் கடந்த 27 வருடமாக சாலையோரம் துணிக்கடை நடத்தி வருகிறார்.

கடந்த சில நாட்களாக 51-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் அப்பகுதியில் சாலையோரம் கடை நடத்தி்வரும் வியாபாரிகளிடம் தினமும் 200 ரூபாய் மாமூல் கேட்டுள்ளார். கொடுக்கவில்லை என்றால் கடையை காலி செய்து விடுவேன் என மிரட்டி பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது.

மோகனாவிடம் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார். அதற்கு மோகனா மாமூல் தரமுடியாது என கூறியதால் ஆத்திரமடைந்த ஜெகதீசன் தகாத வார்த்தையால் திட்டி, அவரை அடித்து, உடம்பில் கை வைத்து தள்ளி அசிங்கப்படுத்தியுள்ளார்.

மோகனா கடையில் இருந்த போது அங்கு சென்ற நபர் ஒருவர் அண்ணன் ஜெகதீசன் மாமூல் வாங்கி வருமாறு கூறியதாக பணம் கேட்டு் மிரட்டியுள்ளார்.

மோகனா பணம் கொடுக்க மறுத்தார். உடனே அந்த நபர் ஜெகதீசனுக்கு போன் செய்து மோகனாவிடம் கொடுக்க போனில் ஜெகதீசன் அவரை தகாத வார்த்தையில் திட்டினார்.

மாநகராட்சி குப்பை அல்லும் வாகனத்தில் வந்த சிலர் மோகனா கடையை காலி செய்ய முயன்றனர். பாதிக்கப்பட்ட பெண் வியாபாரி மோகனா வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கைது செய்யப்பட்ட கவுன்சிலர் ஜெகதீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையில் மது அருந்தி கொண்டிருந்த போது அதனை தட்டி கேட்ட ரோந்து காவலர்களை மிரட்டிய வீடியோ வைரலானதை அடுத்து அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Input From: Hindu

Similar News