பெண் போலீசின் இடுப்பை பிடித்து கிள்ளிய தி.மு.க. இளைஞர் அணி பிரமுகர்கள் - நெரிசலை சாதகமாக்கி அத்துமீறல்!
விருகம்பாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் விருகம்பாக்கம் சட்டம்-ஒழுங்கு பிரிவில் காவலராக பணிபுரிந்து வரும் இளம்பெண் போலீஸ் ஒருவரும் சக காவலர்களோடு சீருடையில் பணியில் ஈடுபட்டிருந்தார். கூட்டம் முடிந்து கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் புறப்பட்ட நேரத்தில் லேசான நெரிசல் ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி கூட்டத்தில் பங்கேற்றிருந்த தி.மு.க. இளைஞர் அணி பிரமுகர்களான பிரவீன், ஏகாம்பரம் இருவரும் பெண் போலீசின் இடுப்பை பிடித்து கிள்ளி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுதொடர்பாக மற்ற காவலர்களிடம் கூறினார். உடனே கேசவன் என்ற காவலர் அவர்களை தட்டிக்கேட்டார். இதைத்தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்றிருந்த தி.மு.க. நிர்வாகிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. போலீஸ் பிடியில் சிக்கிய இருவரையும் மீட்க தி.மு.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரச்சினையை பெரிதுபடுத்த வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து தி.மு.க. நிர்வாகிகளை போலீசார் அனுப்பி வைத்தனர்.
கூட்ட நெரிசலில் தெரியாமல் கைபட்டுவிட்டதாகவும், வேண்டுமென்றே செய்யவில்லை எனவும் இதற்காக பெண் போலீசிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்றும் கடிதம் எழுதி கொடுத்தனர். பெண் போலீசிடம் அத்துமீறிய தி.மு.க. நிர்வாகிகளான பிரவீன், ஏகாம்பரம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Input From: Maalaimalar