காவி வேட்டி, துண்டு அணிய கோயில் பூசாரிகளுக்கு தடை? முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற விழாவில் அதிகாரிகள் அட்டூழியம்!

Update: 2023-01-07 04:38 GMT

தமிழகத்திலுள்ள கிராமப்புற கோயில்களில் திருப்பணி நடத்த தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான நிதி வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

ஒவ்வொரு கோயிலுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் நிதியை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து கிராம கோயில்களைச் சேர்ந்த சுமார் 5,000 பூசாரிகளும், 1,000க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் வந்திருந்தனர்.

விழாவுக்கு வரும் கிராம பூசாரிகள் யாரும் காவி நிற வேட்டி, துண்டு அணிந்துவரக் கூடாது என்று அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு போட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

காவி உடை அணிந்து வந்தால் விழாவில் அனுமதி மறுக்கப்படும். நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரித்திருக்கிறார்கள். இதனால், அனைத்து பூசாரிகளும் வெள்ளை வேட்டி, துண்டு அணிந்து வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் கிராமப்புற கோயில்களைச் சேர்ந்த பூசாரிகள். காலம்காலமாக காவி வேட்டி, துண்டு அணிவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் அவர்கள் காவி உடை அணிய அதிகாரிகள் தடை போட்டது அதிருப்தியை ஏற்படுத்தியது. 

இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் வெள்ளை, வேட்டி சட்டை அணிந்து மேடைக்கு வந்தனர். ஒரு சிலர் தோளுக்கு போடும் துண்டு மட்டும் காவி நிறத்தில் அணிந்து இருந்தனர். 

Input From: Dinamalar

Similar News