பழநி கோவிலில் கும்பாபிஷேகம் நடப்பதற்கு முதல் நாள், கருவறைக்குள் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நுழைந்து, சாமி தரிசனம் செய்தது சர்ச்சையாகியுள்ளது.
பழநி கோவில் இணை ஆணையர் நடராஜன், கும்பாபிஷேகம் நடப்பதற்கு முதல் நாள் வரை, யாரும் கோவில் கருவறைக்குள் நுழையக் கூடாது என, உத்தரவிட்டு இருந்தார்.
அதை மீறி செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு, இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம ரவிக்குமார் புகார் அனுப்பியுள்ளார்.
பொதுவாக கும்பாபிஷேகம் முடிந்து, 48 நாட்களுக்கு எந்த விழாவையும் நடத்த மாட்டார்கள். ஆனால், பழநியில் கும்பாபிஷேகம் முடிந்த கையோடு, தைப்பூச திருவிழாவை அறிவித்துள்ளனர். இதுவும் ஆகம விதிமீறல். இது அரசுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல. எனவே, பழநி முருகன் கோவிலுக்கு, ஆகம விதிகள்படி மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.
இப்படி தவறு மேல் தவறு செய்திருக்கும் அமைச்சர் சேகர்பாபு, 400 பேருடன் கருவறைக்குள் நுழைந்தது ஏற்று கொள்ள முடியாத நிகழ்வு. அவர்கள், அங்கிருக்கும் மூலவர் முருகனை என்ன செய்தனர் என தெரியவில்லை. மூலவர் முருகன், அங்கேதான் இருக்கிறாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது. அதனால், சிலை தடுப்பு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளேன் என்றார்.
Input From: Dinamalar