அரிசியை காலில் மிதித்து விநியோகிக்கும் ரேஷன் கடை ஊழியர் - விடியல் ஆட்சியில் எல்லாம் சாத்தியமே!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மாரியம்மன் கோவில் பகுதியில் ரேஷன் கடை உள்ளது.
இங்கு மக்களுக்கு வழங்க வேண்டிய அரிசியை, அரிசி சாக்கில் இருந்து எடுத்து எடை போட்டு விநியோகிப்பது இல்லை. மாறாக அரிசியை சாக்கிலிருந்து எடை போடும் மெஷின் அருகே தரையில் கொட்டிவிடுகின்றனர்.
அந்த அரிசியை எடை போட்டு விநியோகிக்கும் ஊழியர், அதன் மீது ஏறி நின்று விநியோகிக்கிறார்.
மக்கள் சமையலுக்காக பயன்படுத்தும் அரிசியை காலில் மிதித்தும், தரையில் கொட்டியும் சுகாதாரமற்ற முறையில் வழங்கும் இந்த அரிசியை மக்களும் வேறு வழியின்றி முகம் சுளித்தபடி வாங்கிச் செல்கின்றனர்.
வேலையை எளிமையாக செய்வதற்காக ரேஷன் கடை ஊழியர் இப்படி செய்கிறார். இதனை அந்தக் கடையில் பணிபுரியும் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லை.
எனவே மக்கள் உணவுக்காக பயன்படுத்தும் ரேஷன் பொருட்களை சுகாதாரமான முறையில் வழங்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊழியர்கள் மீது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Input From: Dinamalar