எனக்கா ஓட்டு போட்டு கிழிச்சீங்க? தண்ணீர் வசதி கேட்ட பெண்கள் மீது எரிந்து விழுந்த அமைச்சர் பொன்முடி!
விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், அங்குள்ள கிராம மக்கள் குடிநீர் வருவதில்லை என குற்றம் சாட்டினர். அப்போது ஆவேசமடைந்த பொன்முடி, இந்த கிராமத்தில் அப்படியே எனக்கு ஓட்டுப்போட்டு கிழி, கிழின்னு கிழிச்சுட்டீங்க.. கேட்க வந்துட்டீங்க.. உட்காருங்க என பேசினார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே அருங்குறிக்கை கிராமத்தில் அரசு பள்ளி கட்டட திறப்பு விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றார்.
உங்கள் கிராமத்தில் ரோடு வசதி, தெரு மின்விளக்கு வசதி, குடிநீர் வசதிகளை நான் தான் செய்து கொடுத்தேன் என பொன்முடி பேசி கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் அமர்ந்திருந்த பெண்கள் சிலர் எழுந்து குடிநீரே வருவதில்லை எனக்கூறி கூச்சல் எழுப்பினர்.
இதனால் சுரீர் என கோபம் பொத்துகிட்டு வந்தது அமைச்சருக்கு. ஆவேசமடைந்த பொன்முடி, இந்த அருங்குறிக்கை கிராமத்தில் அப்படியே எனக்கு ஓட்டுப்போட்டு கிழி, கிழின்னு கிழிச்சுட்டீங்க.. கேட்க வந்துட்டீங்க.. உட்காருங்க என்றார்.
உடனே கூட்டத்தை வேகமாக முடித்துவிட்டு அமைச்சர் கிளம்பி சென்றார்.
இதே பொன்முடி தான் இபெண்களுக்கு இலவச பஸ் பயணத் திட்டம் தொடர்பாக பேசுகையில், பஸ்சில் பெண்கள் எல்லாம் எப்படி போகிறீர்கள்? எல்லாம் ஓசி ஓசி பஸ்சில் போகிறீர்கள் என பேசி கேவலப்படுத்தி இருந்தார்.
Input From: Dinamalar