தமிழகத்தில் கல்வி வளர்வதற்கு கிறிஸ்தவ மிஷனரிகள் காரணம்: அளந்து விடும் அமைச்சர் பொன்முடி!

Update: 2023-03-12 07:16 GMT

தமிழர்களின் வரலாற்றைப் புரட்டினால், அதில் கிறிஸ்துவ மிஷினரிகளே ஏழைகளுக்கு கல்வியறிவை அளித்திருக்கும் என்றும், கல்வியை அனைவருக்கும் கொண்டு செல்வதற்காகவே அனைத்து இடங்களிலும் கல்வி நிலையங்கள் அமைக்கப்பட்டதாக அமைச்சர் பொன்முடி கூறினார். 

வேலூர் மாவட்டம், காட்பாடி காந்தி நகரில் உள்ள தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த 67வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இந்த விழாவில் சிறப்பு மலரை வெளியிட்டு மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.

வெள்ளைக்காரன் நம்மை ஆண்டான், அது வேறு. ஆனால், அவன் வராமல் போயிருந்தால், அதையொட்டி கிறிஸ்தவ மதம் உள்ளே நுழையாமல் இருந்திருந்தால் நமக்கு நாம் யார்? என்பதே மறந்து போயிருக்கும்.

தமிழர்களின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் எல்லாம் செய்து கொடுத்தவர்கள் அவர்கள். அவர்கள் தான் இந்த கல்வியை நாம் கற்க வேண்டும் என்று ஆங்காங்கே கல்வி நிலையங்களை கட்டி எழுப்பினார்கள். எனவே, அதனை நன்றி பெருக்கோடு நினைத்துப் பார்க்க வேண்டும். மதம் என்பது மனிதர்களை சாகடிக்கக்கூடியது தான்.

"குறிப்பாக தமிழ்நாட்டில் அடித்தட்டில் உள்ள மக்கள் படிக்கவே முடியாத நிலையில், ஒரே ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்றிருந்ததாகவும், அதன் பின்னர் வந்த கிறிஸ்தவ மிஷனரிகளே அடித்தட்டு மக்களும் ஏழை மக்களும் என எல்லோரும் படிக்கக் கூடிய சூழல் உருவானதாகவும் பேசினார்.

முதலில் கிறிஸ்டியன் மிஷனரிகள் கன்னியாகுமரியில் தொடங்கியதால் தான், இன்றைக்கு கன்னியாகுமரி மாவட்டம் கல்வியில் உயர்ந்து இருப்பதாகவும், இதற்கு காரணம் கிறிஸ்துவ மிஷனரிகள் என்று கூறினார். 

Input From: ETV

Similar News