தமிழகத்துக்கு பார்த்து பார்த்து செய்யும் பிரதமர்: விருதுநகரில் அமைகிறது மெகா ஜவுளி பூங்கா - தென் மாவட்டங்கள் தலைகீழ் வளர்ச்சி காணும்!

Update: 2023-03-18 01:50 GMT

தமிழகம், தெலங்கானா, கர்நாடக, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமைக்கப்பட உள்ள பிரதமரின் மித்ரா மெகா ஜவுளிப் பூங்காக்கள் “இந்தியாவில் தயாரிப்போம்” மற்றும் “உலகுக்காக உற்பத்தி செய்வோம்” என்பதற்கு சிறந்த உதாரணங்களாகத் திகழும் என்று பிரதமர்  நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பண்ணையில் இருந்து நூல் இழை, அதிலிருந்து தொழிற்சாலை, அதிலிருந்து ஆடை வடிவமைப்பு, அதிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி என்ற 5 ஃஎப் அடிப்படையிலான தொலைநோக்குப் பார்வைக்கேற்ப ஜவுளித்துறையை இந்தப் பூங்காக்கள் வலுப்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் மித்ரா மாபெரும் ஜவுளிப்பூங்காக்கள், ஜவுளித்துறைக்கு அதிநவீன உள்கட்டமைப்புகளை வழங்குவதுடன் கோடிக்கணக்கான முதலீடுகளை ஈர்த்து லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள்:


“பிரதமரின் மித்ரா மாபெரும் ஜவுளிப்பூங்காக்கள், ஜவுளித்துறைக்கு அதிநவீன உள்கட்டமைப்புகளை வழங்குவதுடன் கோடிக்கணக்கான முதலீடுகளை ஈர்த்து லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இது “இந்தியாவில் தயாரிப்போம்” மற்றும் “உலகுக்காக உற்பத்தி செய்வோம்” என்பதற்கு சிறந்த உதாரணமாகத் திகழும்.

Similar News