சென்னை, திருச்சி, தூத்துக்குடிக்கு டார்கெட்? இதுவரை பார்த்திராத மாற்றத்தை காட்டப்போகும் மத்திய அரசு!
தற்போதைய முனையங்கள், புதிய முனையங்களின் விரிவாக்கம் மற்றும் நவீனப்படுத்துதல், ஓடுதளங்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் விமானப் போக்குவரத்துத் துறையில் சுமார் ரூ.98,000 கோடி அளவிற்கு முதலீடு செய்ய இந்திய விமான நிலையங்கள் ஆணையம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இவற்றில் சுமார் ரூ. 60,000 கோடி தற்போதைய விமான நிலையங்களின் மேம்பாட்டிற்காகவும், சுமார் ரூ.38,000 கோடி புதிய பசுமை விமான நிலையங்களை உருவாக்கவும் ஒதுக்கப்பட்டுள்ளன. 21 புதிய பசுமை விமான நிலையங்களை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் மதிப்பு ரூ.45,000 கோடிக்கும் மேலாக உள்ளது.
சென்னை விமான நிலையம் 2-ம் கட்ட நவீனமயமாக்கலுக்கு ரூ.2,467 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையக் கட்டிடம் உள்ளிட்டவற்றின் மேம்பாட்டிற்காக ரூ.951.28 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி விமான நிலைய மேம்பாட்டிற்காக ரூ.380.81 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, குவாஹத்தி, திருவனந்தபுரம், மங்களூரு ஆகிய ஆறு விமான நிலையங்களை 50 ஆண்டுகளுக்கு பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டாண்மையின் கீழ், இயக்கி, பராமரித்து, மேம்படுத்த இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
2020-2021 ஆம் ஆண்டில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆறு விமான நிலையங்களின் பரிவர்த்தனையின் விதிமுறைகள், நித்தி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி தலைமையிலான அதிகாரமளிக்கப்பட்ட செயலாளர்கள் குழுவால் முடிவு செய்யப்பட்டது.
Input From: TOI