இந்தியாவின் என்ஜின் தமிழகம்: தமிழ்நாடு வளர்ந்தால் இந்தியாவே வளரும் - பிரதமர் பேச்சின் சூட்சமம்!

Update: 2023-04-09 06:54 GMT

மத்திய அரசை பொருத்தவரை தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்கு பிரதான முக்கியத்தும் அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் ரயில்வே உள்கட்டமைப்பு வசதிகளுக்காக முன்னெப்போதும் இல்லாத வகையில், ரூ.6,000 கோடிக்கும் அதிகமான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை ஆண்டுதோறும் ரயில்வே உள்கட்டமைப்புக்கு ரூ.900 கோடிக்கும் குறைவான தொகையை சராசரியாக ஒதுக்கப்பட்டது. அதே நேரத்தில் 2004-ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை, தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளின் தூரம் 800 கிலோமீட்டராக இருந்தது.

இந்த தூரம் 2014-ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் 2 ஆயிரம் கிலோமீட்டராக மாற்றியமைக்கப்பட்டது. மேலும் கடந்த 2014-15-ம் நிதியாண்டு ரூ.1,200 கோடி அளவுக்கு செலவிடப்பட்ட தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்கான முதலீடு, 2022-23-ம் நிதியாண்டில் 6 மடங்காக அதிகரித்து ரூ.8,200 கோடியாக இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு பல்வேறு முக்கியத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் பாதுகாப்பு தொழில் உயர்மட்ட சாலை, பிஎம் மித்ரா மெகா ஜவுளித் தொழில் பூங்காக்கள், பெங்களூரு- சென்னை விரைவுச் சாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. சென்னை அருகே பன்முனைய தளவாட பூங்கா, பாரத்மாலா திட்டத்தின் கீழ், மாமல்லபுரம் முதல் கன்னியாகுமரி வரையிலான ஒட்டுமொத்த கிழக்கு கடற்கரை சாலைப்பணிகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் மூன்று முக்கிய நகரங்களான சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகியவைகள் இன்று தொடங்கப்பட்ட மற்றும் முடிக்கப்பட்ட திட்டங்கள் மூலம் நேரடியாக பயனடையும். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் தொடங்கி வைக்கப்பட்டது. வளரும் பயணிகளின் தேவைக்கு இது பலனளிக்கும்.

இந்தியாவின் வளர்ச்சி இயந்திரத்திற்கு தமிழ்நாடும் முக்கியப் பங்காற்றுகிறது. இன்று தொடங்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மிகப்பெரிய அளவில் வலு சேர்க்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உயர்தர உள்கட்டமைப்பு வசதிகள் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, வருவாய் அதிகரிப்பதன் மூலம், தமிழ்நாடு வளர்கிறது. தமிழ்நாடு வளரும்போது இந்தியாவும் வளரும் என பிரதமர் கூறினார்.   

Input From: Dinamalar

Similar News