திமுக மீது அண்ணாமலையின் சர்ஜிகல் ஸ்ட்ரைக் - அஸ்திவாரமே ஆட்டம் காணப்போகுது: ஸ்டாலின் வாய் திறந்தால் சோலி முடிஞ்ச்!
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆளும் தி.மு.க., பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதில் முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் யாருக்கு எவ்வளவு சொத்து என்ற விவர பட்டியலையும், வெளியிட்டார்.
மொத்தம் ரூ.1,343,170,000,000 (ரூ.1,34,317 கோடி) சொத்துகளை திமுக நிர்வாகிகள் வாங்கி குவித்துள்ளனர். இதில் ரூ.200 கோடிக்கு ஆல்ஸ்டாம் கம்பெனி மூலமாக கைமாறியது . இந்தோ யூரோப்பியன் வென்சர் பிரைவேட் லிமிடெட் என்ற சிங்கப்பூரை சேர்ந்த ஷெல் கம்பெனியும், ஹாங்காங்கை சேர்ந்த குளோபல் கிங் டெக்னாலஜி என்ற ஷெல் கம்பெனியும் தான் 2011ல் தேர்தல் நிதியாக இந்த பணத்தை முதல்வரிடம் கொடுத்துள்ளது.
இதனை சிபிஐ இயக்குனரிடம் நானே நேரடியாக புகார் அளிக்க உள்ளேன். இதில் மத்திய அரசின் 15 சதவீத பங்கு இருப்பதால் இதனை சிபிஐ விசாரிக்க முழு உரிமை உள்ளது.
இது நம் ஜனநாயகத்திற்கான போராட்டம். ஊழல், லஞ்சம் குறித்து இப்போது கேள்வி கேட்காவிட்டால், தமிழ் சமூகத்திற்கு மிகப்பெரிய கேடு காத்துக்கொண்டு இருக்கிறது என அண்ணாமலை கூறினார்.
தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியல் 2024ம் ஆண்டுக்குள் வெளியிடப்படும். அடுத்தடுத்து அமைச்சர்கள் உள்ளிட்டோரின் பட்டியல் வெளியிடுவேன். இன்னும் 3 பட்டியலை வெளியிட உள்ளேன். இதுவரை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் 6 புகார் அளித்துள்ளோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் சிபிஐ.,யிடம் செல்கிறோம் என கூறினார்.
INput From: Dinamalar