கோவில் வழிபாட்டு தலம்... சுற்றுலா தலம் அல்ல... அறநிலையத்துறைக்கு நினைவூட்டிய இந்து முன்னணி!
சில நாட்கள் முன்பு பழனி கோவிலில் இந்து அல்லாதோர் வர அனுமதியில்லை என்ற அறிவிப்பு பலகையால் விமர்சனம் எழுந்தது. தொடர்பாக பல்வேறு இந்து அமைப்புகளும் எந்த ஒரு அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அந்த வகையில் இந்து முன்னணியின் சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுபோன்ற அறிவிப்பு பல பிரபல கோவில்களில் பல ஆண்டுகளாக இருக்கிறது. வேற்று மதத்தினர் இறைவனை வழிபட விரும்பினால் அவர்கள் கோவிலில் உள்ள பதிவேட்டில் இறைநம்பிக்கை உடன் வழிபட உறுதியை எழுத்து பூர்வமாக அளித்து விட்டு செல்ல அனுமதிப்பதும் நடைமுறையில் உள்ளது.
கோவில் காட்சி பொருளோ, சுற்றுலா இடமோ அல்ல என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் இந்து சமயம் அனைவரையும் அரவணைக்கவே விரும்புகிறது. இன்று ஜப்பான், இத்தாலி உள்பட பல வெளிநாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் தமிழகம் வந்து முக்கியமான கோவில்களில் வழிபாடு நடத்தினார்கள் என்பதை பார்க்கிறோம்.
மலைக்கோவிலுக்கு போவதற்கு வைத்துள்ள இழுவை ரயில் வசதி பக்தர்களுக்காக தான். அதில் வேற்று மதத்தினர் பொழுது போக்கிற்காக ஏறி பக்தர்களுக்கு இடையூறு செய்ததால் ஏற்பட்ட பிரச்சினையால் தான் பழனியில் அந்த அறிவிப்பு பலகை வைக்க நேரிட்டது. எனவே இந்துக் கோவில் பாதுகாப்பு புனிதம் காக்க வேண்டிய கடமை கோவிலின் நிர்வாகத்தை கையில் வைத்திருக்கும் இந்து சமய அறநிலையத் துறையின் உள்ளது என்பதை உணர்ந்து சேயல்பட வேண்டும் என்பதை இந்து முன்னனி சுட்டி காட்டி இருக்கிறது. நேற்று முன்தினம் பழனி முருகன் கோவிலில் மாற்று மதத்தினருக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பை அகற்றிய அறநிலையத்துறை.
Input & Image courtesy: News