கோவில் நிலம் கோவிலுக்கு தான் சொந்தம் என்ற தீர்ப்பு... இந்து முன்னணி வரவேற்பு...

Update: 2023-06-30 05:22 GMT

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பல்வேறு கோவில்கள் நிலங்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது ஆனால் அப்படி மீட்கப்படும் நிலங்களை கோவில்களின் நன்மைக்காக மட்டும் பயன்படுத்தாமல் அரசு தங்களுடைய தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. இது தொடர்பாக தொடங்கப்பட்ட வழக்கில் கோவில் நிலங்களை வேறு எந்த துறைகளுக்கும் வழங்கக் கூடாது என்று தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.


இந்துசமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில் நிலங்களை வேறு துறைகளுக்கு பயன்படுத்துவது கூடாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வந்திருக்கிறது. சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள சக்திமுத்தம்மன் கோவிலுக்கு சொந்தமான சுமார் 2.3 ஏக்கர் நிலம் மீன்வளத்துறை பயன்பாட்டிற்கு 1963 ஆம் ஆண்டும் சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் நிலம் 1.15 ஏக்கர் 2018 ஆம் ஆண்டும் போக்குவரத்து துறைக்கும் அறநிலையத்துறை அனுமதியில்லாமல் எடுத்துக் கொள்ளப்பட்டது.


இதை எதிர்த்து கோவில் நிர்வாகம் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் கோவில் நிலங்களை வேறு துறைகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்று 2020 ல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அரசாங்கம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கிலும் கோவில் நிலங்களை கோவில் பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் வேறு துறைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை இந்துமுன்னணி வரவேற்கிறது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News