காவல்துறையை வைத்து அடக்கு முறையில் ஈடுபடுவதா.? இந்து முன்னணி தலைவர் குற்றச்சாட்டு..

Update: 2023-07-07 07:20 GMT

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் சார்பில் தமிழகத்தில் போடப்படும் பொய் வழக்குகளை கண்டித்து தற்போது டுவிட்டர் பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறது. இது பற்றி இந்து முன்னணி தரப்பில் கூறும் பொழுது, "இந்து முன்னணி கலை இலக்கிய அணி மாநில தலைவரும் திரைப்பட சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் அவர்கள் திரைத் துறையை சேர்ந்தவர் என்பதால் சமூக வலைதளத்தில் பரவலாக பகிரப்பட்ட நடன வீடியோவை ரசனை எண்ணத்தோடு பகிர்ந்துள்ளார். குறிப்பாக அந்த வீடியோவில் கிறிஸ்தவ மதத்தை புண்படுத்துவதாக உள்ளது என்றும் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே அவர் அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார் என்றும் அவர் மீது அவதூறு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார்.


சமீபத்தில் திமுக மீது அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் உமா கார்கி அவர்களை பெண் என்றும் பாராமல் சாதாரண வழக்கிற்கு கைது செய்தது மட்டுமில்லாமல் விசாரணை காவலில் எடுப்பதெல்லாம் கொடுமையிலும் கொடுமை. போலீஸ் கஸ்டடியில் எடுத்து பயமுறுத்த பார்க்கிறார்களா.. அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தால் காவல்துறையை வைத்து அடக்குமுறையில் ஈடுபடுவதா.?


அதேபோல் பாஜகவின் மாநில செயலாளர் SG. சூர்யா அவர்கள் சிதம்பரம் கோவில் குறித்து வெளியிட்ட பதிவிற்கும் வழக்கு போடப்பட்டுள்ளது. எனவே கனல் கண்ணன், SG சூர்யா மற்றும் உமா கார்கி அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கையும் திரும்பப் பெற வேண்டுமெனவும்" இந்து முன்னணி தன்னுடைய அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் இது பற்றி கேட்டுக் கொண்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News