என் மண், என் மக்கள் பாதயாத்திரை.. அண்ணாமலையுடன் இணையும் மக்கள் புகார் பெட்டி..
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊழலுக்கு எதிராக ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை பாஜகவினர் செய்து வரும் நிலையில் பாதயாத்திரைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 6 மாதங்கள் பாதயாத்திரை மேற்கொள்ளும் அண்ணாமலை, 225 ஊர்களில் மக்களை சந்திக்கிறார். ராமேசுவரத்திலிருந்து பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தலைமையில் என் மண் என் மக்கள் யாத்திரை வருகிற 28 -ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தொடங்கி வைக்கவுள்ளாா்.
இந்த 6 மாத கால நடைபயணத்தின் போது பாஜக தேசியத் தலைவர்கள் பலரும், அண்ணாமலையுடன் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையொட்டி, இன்று பாஜக தரப்பில் இருந்து சென்னையில் பாத யாத்திரை தொடர்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, பாஜக மூத்தலைவர்கள் அனைவரும் இந்த பாதயாத்திரை தொடர்பாக முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
குறிப்பாக இந்த பாதயாத்திரை எந்த மாதிரியான தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பாகவும் அவர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள். பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் பொழுது, பாஜகவின் எம்எல்ஏவும் மற்றும் தேசிய மகளிர் அணி தலைவியும் ஆக இருக்கும் வானதி சீனிவாசன் அவர்கள் இன்று தொடங்கி வைத்து இருக்கிறார். விடியல முடியல என்ற ஹேஸ்டாகுடன் இந்த ஒரு புகார் பெட்டி இணைந்து இருக்கிறது.
Input & Image courtesy: News