ஒரே பாடத்திட்டத்தை திணிப்பதா..பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர் கண்டனம்..
தமிழகத்தில் தற்போது உயர்கல்வித்துறை சார்பில் இந்த ஆண்டு முதல் அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை தயாரித்து அவற்றை நடைமுறைப்படுத்துவதில் தமிழக அரசு உறுதியாக இருந்து வந்தது. அனைத்து அரசு பல்கலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளதால், உயர் கல்வித் துறையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒரே பாடத் திட்ட முறைக்கு பேராசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் கலை மற்றும் அறிவியல் படிப்புகளை நடத்தும் வகையில் 13 அரசு பல்கலைகள் செயல்படுகின்றன.
இவை அனைத்துக்கும் சேர்த்து, தமிழக உயர் கல்வி மன்றம் வழியே, பொதுவான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. அதாவது இதற்கு முன்பு வரை அனைத்து பல்கலைக்கழகங்களும் தங்களுக்கு உரிய பாடத்திட்டங்களை தாங்களே வகுத்து அவற்றை நடைமுறை படுத்திக் கொண்டிருந்தது ஆனால் இவற்றை தற்பொழுது நிக்கும் விதமாக புதிய ஒரே பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த பாடத்திட்டத்தை தான் அனைத்து பல்கலைகளும் பின்பற்ற வேண்டும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது. குறிப்பாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி அவர்கள் இது தொடர்பாக கருத்து ஒன்றை தெரிவித்து இருக்கிறார். "தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டங்களை கொண்டு வருவது பேராசிரியர்கள் மத்தியில் எந்த ஒரு ஆதரவும் கொடுக்கப்படவில்லை. எனவே உயர்கல்வியில் தொடர்ந்து குழப்பம் விளைவிப்பதை தவிர்த்து பல்கலைக்கழகங்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் எண்ணத்தையும், உள்நோக்கத்தையும், மலிவான அரசியலை மாணவர்கள் நலன் கருதி அரசு கைவிட வேண்டும்" என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
Input & Image courtesy: News