என் மண், என் மக்கள் யாத்திரை.. அ.தி.மு.கவிற்கு அண்ணாமலை விடுத்த அழைப்பு..

Update: 2023-07-26 04:44 GMT

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் வரும் 28ஆம் தேதி பாதயாத்திரை செல்ல உள்ளதாக அறிவித்தார். ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் 6 மாதங்கள் பாதயாத்திரை மேற்கொள்கிறார் அண்ணாமலை. ராமேஸ்வரத்தில் தொடங்கும் பாதயாத்திரை 110வது நாளில் சென்னையில் நிறைவு செய்ய இருக்கிறது. இந்த யாத்திரை 5 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதலில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் பாத யாத்திரை மேற்கொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது.


இந்த யாத்திரையில் இவருடன் நடைபயணம் மேற்கொள்வதற்காக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சேர்த்துள்ளதாகவும் பாஜக தரப்பில் தெரிவித்தன. இந்த நடை பயணத்தில் பல்வேறு இளைஞர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், யாத்திரையின் முதல் நாள் அண்ணாமலை அவர்கள் முக்கியமாக அழைப்பு ஒன்றை விடுத்து இருக்கிறார்.


அதாவது இந்த யாத்திரை விழாவில் கலந்து கொள்வதற்காக கூட்டணி கட்சிகளுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்திருக்கிறார். அதன்படி, இந்த பாதயாத்திரை தொடக்க விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி சாமிக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பதும் கூடுதல் தகவல்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News