நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. பாஜகவை பொறுத்தவரை 3வது முறையாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில் களப்பணியை தொடங்கியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றி பெற வேண்டிய இலக்குகளை நிர்ணயித்து தேர்தல் பணிகளை செயல்படுத்தி வருகிறது. இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாளை முதல் தமிழகம் முழுவதும் தனது நடை பயணத்தை தொடங்க உள்ளார்.
ராமேஸ்வரத்தில் இன்று அண்ணாமலை தொடங்கவுள்ள நடை பயணத்தை பாஜக மூத்த தலைவர் அமித்ஷா தொடங்கிவைக்கவுள்ளார். ராமேஸ்வரத்தில் தொடங்கும் அண்ணாமலை ராமநாதபுரத்தில் துவங்க இருப்பதன் காரணமாக, தற்போது பாஜக சார்பில் அங்கு பேருந்து ராமநாதபுரம் வந்து சேர்ந்தது. இந்த பேருந்தில் தொண்டர்களை சந்திக்கும் வகையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் திட்டங்கள் மற்றும் பா.ஜ.கவின கட்சிக்கொடி நிறமான முழுவதும் காவி நிறமாக காட்சியளிக்கிறது.
குறிப்பாக ராமேஸ்வரத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்கும் அண்ணாமலை ஓய்வெடுப்பதற்காக பல வசதிகளை கொண்ட வாகனம் தயாராகியுள்ளது. அதனை பாஜகவினர் தங்களின் முகநூலில் அண்ணாமலையில் தேர் என்று பதிவிட்டு வருகின்றனர். இந்த பேருந்து தொடர்பான வீடியோ போன்று தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Input & Image courtesy: News