பக்தர்களிடம் அசிங்கமாக பேசிய அறநிலையத்துறை அதிகாரி... இந்து முன்னணி மாநிலத் தலைவர் கண்டனம்..
இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் முழுமையாக தங்களுடைய அதிகாரங்களை செய்து, அங்கு வரும் பக்தர்களை கடுமையாக வஞ்சிக்கிறது அறநிலையத்துறை என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இது பற்றி அவர் மேலும் கூறும் பொழுது, பழனி கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட சேவல்கள் ஏலம் விடும் நடைமுறை இருந்தது. அந்த ஏலம் விடுவது பழனி கோயிலில் மேல்பிரகாரத்தில் வைத்து ஏலம் விடுவது வழக்கம். இரண்டு நாட்களுக்கு முன்பு தற்போது உதவி ஆணையராக இருக்கக்கூடிய திருமதி. லட்சுமி என்பவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது போல அவர் நினைத்த இடத்தில் ஏலம் விடுவதும், நிணைத்த இடத்தில் நின்று அதிகாரம் செய்வதும், பக்தர்களை அசிங்கமாக பேசுவதும் கோயிலுக்கான நடைமுறையை மாற்றி அமைக்க திட்டமிடுவதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது மேல் பிரகாரத்தில் இருக்கக்கூடிய சேவல்களை கீழே கொண்டுவந்து கடைகளில் வியாபாரம் செய்வது போல வைத்து ஏலம் விட்டார். அந்த ஏலம் எடுப்பதில் பல பேருக்கு போட்டியும் தகராறும் வரக்கூடிய சூழ்நிலை அமைந்தது. இதனால் அங்கு இருக்கக்கூடிய பக்தர்களும் இந்து முன்னணி நிர்வாகிகளும் எப்போதும் நடக்கின்ற நடைமுறைப்படி ஏலம் விடுமாறு கூறினார். அந்த உதவி ஆணையர் லட்சுமி அவர்களும் அவருடன் இருக்கும் அதிகாரிகளும் பக்தர்களிடம் தாறுமாறாக வாக்குவாதம் செய்தனர்.
அந்த நேரத்தில் தட்டிக் கேட்க வந்தவர்களைப் பார்த்து "லூசு மாதிரி பேசக்கூடாது, இந்த கோயிலில் எங்கே ஏலம் விட வேண்டும் என்று எனக்கு தெரியும், நான் நினைத்த பக்கம்தான் ஏலம் விடுவேன் உங்களால் என்ன செய்ய தெரியுமோ செய்யுங்கள்" என்று எதேச்திகாரமாக பேசினார். இதுபோன்று தொடர்ந்து பழநி மற்றும் திருச்செந்தூர் கோவில்களில் இணை ஆணையர் அலுவலகம் மூலம் பக்தர்களிடம் நேரடியாக தகராறு செய்வதையும் பக்தர்கள் உணர்வுக்கு மதிப்பளிக்காததையும் இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது என்று அவர் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். இந்த போக்கு தொடர்ந்து நீடித்தால் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
Input & Image courtesy: News