அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை.. ஆதரவு தெரிவித்த திருநங்கைகள்..

Update: 2023-08-02 02:23 GMT

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை விளக்கவும் லஞ்சம் ஊழலை எதிர்த்தும் 110 நாட்களுக்கு பாதயாத்திரை செல்கிறார். அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த ஐந்துமுனை பகுதியில் என் மண் என் மக்கள் எனும் பாதயாத்திரைக்காக சென்றார். அவருக்கு பாஜக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இப்படி அண்ணாமலை அவர்கள் கடந்த நான்கு நாட்களாக பாத யாத்திரை செல்லும் வழிகளில் எல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதுகின்றன.


திருநங்கைகளும் இந்த ஒரு கூட்டத்தை நீங்கள் பார்க்கலாம் சமீபத்திய கூட்டத்தில் கூட திருநங்கைகள் அவர்கள் முழுமையாக களத்தில் இறங்கி அண்ணாமலை அவர்களுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து இருக்கிறார்கள். அதிகமாக சமூக வலைத்தளங்களில் உலா வரும் வீடியோக்களில் ஒன்றாக சுமார் 15 திருநங்கைகள் பாஜகவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காட்சிகளில் அவர் கூறும் பொழுது, "அண்ணாமலை அவர்களின் தங்களுடைய வாழ்வை மாற்றுவதற்கும் மற்ற மக்களைப் போல தங்களையும் அனைவரும் மதிக்க வேண்டும் என்பதற்காக தங்கள் அனைவரும் பாஜகவில் இணைந்ததாகவும் அவர்கள் பதிவிட்டு இருந்தார்கள்.


அது மட்டும் கிடையாது தன்னிச்சையாக அண்ணாமலை அவர்கள் பாஜகவில் தமிழகத்தில் முன்னெடுத்து நடத்தி வருகிறார். எனவே அவருக்கு தங்களுடைய பொது முழு ஆதரவர்களை தெரிவிக்கும் விதமாக தாங்கள் களத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கிறோம். நிச்சயம் அவர் எங்களுக்காக குரல் கொடுப்பார்" என்று கூட்டத்தில் இருந்த திருநங்கைகள் சார்பாக ஒருவர் பேசுகிறார். இப்படி ஒட்டுமொத்த திருநங்கைகளின் ஆதரவுகளையும் பெற்ற ஒரு நபராக அண்ணாமலை அவர்கள் தற்போது மாறி வருகிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News