குற்றாலநாதர் கோவிலுக்கு வந்த சோதனையா இது.. அறநிலையத் துறையை எதிர்த்த இந்து முன்னணி..

Update: 2023-08-02 02:23 GMT

தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் திருவிழா நாட்களில்  கோவிலில் அன்னதானம் செய்வதற்கு அங்கு இருந்த ஜமீன் பல்வேறு பொருட்களை அளித்து இருக்கிறார். குறிப்பாக, 500 ஆண்டுகளுக்கு முன், சொக்கம்பட்டி ஜமீன் தரப்பில் செம்பு, பித்தளை, வெண்கல பாத்திரங்கள் போன்றவை வழங்கப்பட்டு இன்றும் அவை அந்த கோவிலில் உள்ளது.அதை, கோவிலுக்கு சொந்தமான கல் மண்டபத்தில் பாதுகாத்தனர். ஆனால் அரசு ஆணையின்படி கல்மண்டபம் தற்பொழுது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாமல், மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.


அதை எதிர்த்து அறநிலையத் துறை வழக்கு தொடர்ந்தது, கல் மண்டபத்தை நிர்வகிக்கும் பொறுப்பை, அறநிலையத் துறைக்கு பெற்றனர். இருப்பினும், கல் மண்டபம் குற்றாலம் பேரூராட்சி கட்டுப்பாட்டில் இருந்தது. சிலர் தினங்களுக்கு முன்பு தான் அங்கு இருந்த பழமையான பாத்திரங்களை டிராக்டரில் கடத்தி சென்று ஏலம் விட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகிறது. இதை அறிந்த இந்து முன்னணி அமைப்பினர் அவர்கள் எடுத்துச் செல்லும் செய்திகளை வீடியோவாக பதிவு செய்தனர்.


உடனடியாக கோவில் நிர்வாகத்திலும் புகார் செய்தனர், அறநிலையத் துறையினர் கண்டு கொள்ளவில்லை .உடனடியாக போலீசில் புகார் செய்யவில்லை. குறிப்பாக கோவிலில் இருந்து பொருட்களை கடத்தி சென்று ஏலம் விடுகிறார்கள் என்பதை அறிந்தும் அசால்டாக அறநிலையத்துறை செயல்பட்டு கொண்டிருந்தது. இது தொடர்பான இந்து முன்னணி வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News