தகுந்த பதிலடி தரப்படும். எச்சரிக்கை செய்த அமர்பிரசாத் ரெட்டி..

Update: 2023-08-07 03:16 GMT

ஊழலுக்கு எதிராகவும், மக்களுக்காக மத்திய பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளில் செயல்படுத்தியுள்ள நலத் திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறும் வகையிலும், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 110 நாள் நடை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நடைபயண திட்டத்தின் இணை பொறுப்பாளராக அமர்பிரசாத் ரெட்டி நியமிக்கப் பட்டுள்ளார்.


இந்த நிலையில் இது குறித்தும் பாஜக சார்பில் என் மண் என் மக்கள் யாத்திரை மக்களிடம் எவ்வளவு வரவேற்பு பெற்று இருக்கிறது என்பது தொடர்பாக தனியார் நாளிதழுக்கு அமர் பிரசாத் ரெட்டி அவர்கள் சிறப்பு பேட்டி ஒன்று சில அனைத்து இருக்கிறார். அதில் இது பற்றி அவர் கூறும் பொழுது, மக்கள் ஆதரவு அமோகமாக உள்ளது. தமிழக பாஜக சார்பில் ரத யாத்திரை பலமுறை நடத்தப்பட்டுள்ளது. நடைபயணம் இதுதான் முதல்முறை. முதல் 5 நாட்களிலேயே எங்களுக்கு நிறையஅனுபவம் கிடைத்திருக்கிறது. 30-க்கும் மேற்பட்ட பாதுகாவலர்களை நியமித்திருந்தாலும், அண்ணாமலை என்ற ஒருவருக்காக கூடும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறோம்.


சிறியவர்கள் முதல் முதியோர் வரை அண்ணாமலையை கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு பகுதிக்கு செல்லும்போதும், அவரைபார்க்க கல்லூரி மாணவர்கள் உட்பட ஏராளமான இளைஞர்கள் வருகின்றனர். இளைஞர்கள் அவரை தங்கள் முன்மாதிரியாக கருதுவதை காணமுடிகிறது. இறுதியாக இந்த யாத்திரையை தடுப்பதற்கு திமுக என்ன முயற்சி செய்தாலும் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று அமிர் பிரசாத் ரெட்டி அவர்கள் கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News