அண்ணாமலை அவர்கள் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரை எண் மண் என் மக்கள் என்று யாத்திரையை 168 நாட்கள் சிறப்பாக நடத்தி முடிக்க இருக்கிறார். யாத்திரை செல்லும் ஒவ்வொரு இடங்களிலும் திமுகவைப் பற்றியும் திமுக அமைச்சர்களை பற்றியும் அவர்கள் செய்த ஊழல்களைப் பற்றியும் மக்களிடம் புட்டு,புட்டு வைத்து இருக்கிறார். ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்.
இது பற்றி அண்ணாமலை அவர்கள் என் மண் என் மக்கள் என்ற யாத்திரையில் குறிப்பிடும் பொழுது, அவர் அதிக அளவில் ஊழலில் ஈடுபட்டிருந்த காரணத்திற்காக தான் அமலாக்க துறையினர் அவர் மீது தற்போது நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள் என்று அண்ணாமலை அவரும் கூறியிருக்கிறார். அவரது கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை ஒரு பக்கம் தொடர்ந்து நடக்கும் நிலையில், மறுபுறம் பல பரபரப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது.
தற்போது அண்ணாமலை அவர்கள் தீவிரமாக பாதயாத்திரை நடைபயணத்தில் ஈடுபட்டு இருக்கிறார். அப்பொழுது அவர் மக்களிடம் கூறும் பொழுது, செந்தில் பாலாஜிக்கு நடந்தது எல்லாம் சும்மாதான் இனிமேல் இவருக்கு இருக்கு பாருங்க என்று கூறி ஒரு ட்விஸ்ட்டையும் வைத்து இருக்கிறார்.
Input & Image courtesy: News