உயர் நீதிமன்றத்தின் திடீர் உத்தரவு.. டாஸ்மாக்கில் இனி அடையாள அட்டை கட்டாயம்..

Update: 2023-08-09 04:10 GMT

மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கின் முடிவில் தற்போது பரபரப்பு தீர்ப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது குறிப்பாக அந்த தீர்ப்பின் காரணமாக டாஸ்மார்க் கடைகளில் நேரம் குறைக்கப்பட வழிவகை ஏற்பட்டு இருக்கிறது. அதாவது இது பற்றி தொடரப்பட்ட வழக்கில் மது விற்பனை நேரம் குறைக்கப்பட வேண்டும் என்றும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை குறைத்து அரசு அறிவிக்கவேண்டும்.


இதை மத்திய அரசு, மாநில அரசுக்கு உத்தரவிட்டு கண்காணிக்க வேண்டும் என்று ஏற்கனவே மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தர விட்டிருந்தனர். இவர்களுடைய இந்த ஒரு உத்தரவு தான் பெரும் பரபரப்பை தமிழகத்தில் ஏற்படுத்துகிறது. ஏற்கனவே டாஸ்மாக்கில் வருமானம் குறைகிறது என்று அரசு புலம்பி கொண்டிருக்கும் சூழ்நிலையில் தற்போது மேலும் நேரத்தை குறைப்பு அரசுக்கு பெரும் தலைவலியாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த உத்தரவை 8 மாத காலமாக அமல்படுத்தவில்லை என்றும், இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரமேஷ், என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.


மதுரை உயர் நீதிமன்றம் மதுரை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்பொழுது நீதிபதிகள் இது பற்றி விசாரிக்கும் பொழுது இனிமே மது அருந்துபவர்களுக்கு அரசின் அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்றும், அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News