அரசியல் உள்நோக்கத்திற்காக பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பதா.. உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கேள்வி..
சாஸ்த்ரா நிகர் நிலைப் பல்கலைக்கழகம் சென்னை மையம் சார்பில் பொது சிவில் சட்டம் தொடர்பான குழு விவாதம் நேற்று முன்தினம் வட பழனி மையத்தில் நடந்தது. பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ்.வைத்திய சுப்ரமணியம் வரவேற்றார். பொது சிவில் சட்டம் தொடர்பான குழு விவாதத்தை பஞ்சாப் ஹரியாணா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.கண்ணன் தலைமையேற்று நடத்தினார். இந்தியாவில் புது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான விவாத கூட்டத்தை இவர்கள் நடத்தினார்கள்.
இந்நிகழ்வில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர் டாக்டர் குரேஷி இது பற்றி குறிப்பிடும் பொழுது, இன்று அதிகபட்சமாக விவாதிக்கப்படும் பொது சிவில் சட்டம் பற்றிய புரிதல் யாருக்கும் இல்லை. இந்த சட்டத்தை எதிர்ப்பவர்களிடம் எதனால் இதை எதிர்க்கிறீர்கள்? எனக் கேள்வி கேட்டால் அவர்களால் பதிலளிக்க முடியவில்லை. இந்த சட்டத்தை சிலர் அரசியல் நோக்கத்துக்காக தவறாக சித்தரிக்கின்றனர். மேலும் அவற்றை செய்வது தவறான செயல் என்றும் அவர் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சஜன் பூவையா இது பற்றி கருத்து தெரிவிக்கும் பொழுது, "பொது சிவில் சட்டம் மத ரீதியிலான பழக்க, வழக்கங்கள் மற்றும் நடை முறைகளுக்கு எதிரானது அல்ல. எனவே இந்த சட்டத்தைப் பற்றி பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. இது நாட்டில் உள்ள இருபாலருக்கும் பொதுவானது என்றார்.
Input & Image courtesy: News