இனி தி.மு.கவால் தப்பிக்கவே முடியாது.. அண்ணாமலை வைத்த புதிய ட்விஸ்ட்..

Update: 2023-08-22 05:03 GMT

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் என் மண் என் மக்கள் என்ற யாத்திரையை தமிழகத்தில் சிறப்பாக தொடங்கி அமோகமாக மக்கள் மத்தியில் ஆதரவை பெற்று வருகிறார். குறிப்பாக பாஜகவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு தற்போது கிடைக்கப்பெற்று வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சாதனைகளையும்,  திட்டங்களையும் அறிந்து கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் அண்ணாமலை அவர்கள் அடுத்தடுத்து திமுக அரசின் உண்மை முகங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வருகிறார்.


இந்த யாத்திரையில் அண்ணாமலை அவர்கள் கூறும் பொழுது, "யாத்திரையாக, 21 நாட்களை வெற்றிகரமாக முடித்து, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதிகளுக்கு சென்றேன். மாநாட்டிற்கு இணையாக மக்கள் அதிக அளவில் குவிந்து வருகிறார்கள் குறிப்பாக கட்சி சாராத பொதுமக்களும் இந்த கூட்டத்தில் அதிகமாக கலந்து கொள்கிறார்கள். வீரத்தின் விளைநிலம் நெல்லை என்பதை அனைவரும் மறுக்க முடியாது. கடந்தாண்டு ஜூன் 5ல், நெல்லை மாவட்டம் செட்டிகுளத்தில், பிரதமர் மோடியின், 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசியதை மறக்க முடியாது.


தாமிரபரணி நீர் தற்போது மாசடைந்து இருப்பதை ஆய்வில் கண்டறியப்பட்டு இருக்கிறது. அனுமதித்ததை விட ஆறு மடங்கு மாசு இங்கு அதிகமாக இருப்பதாகவும் குடிக்கவோ, குளிக்கவோ பயன்படுத்த முடியாத அளவிற்கு இவை மாசடைந்து இருக்கிறது. ஆனால் இவற்றை பற்றி தமிழர் முதல்வர் கண்டு கொள்வதே கிடையாது. அவர்களுக்கு எப்போதும் மது விற்பனையில் எப்படி வருவாயை பெருக்கலாம் என்பதே, அவரின் ஒரே சிந்தனை. விரைவில் மக்கள் மாற்றத்தை நோக்கி எதிர்பார்க்கலாம் என்றும் அண்ணாமலை அவர்கள் கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News