கோவிலை கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு தாரை வார்ப்பதா.. இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்..

Update: 2023-08-25 08:42 GMT

வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை கிறிஸ்தவர்களுக்கு வழங்கியதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் நேற்று சென்னை சாலிகிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து முன்னணி தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெமினி ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். இது தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் பலத்த கோஷங்களையும் எழுப்பி இருக்கிறார்கள். இது பற்றி தன்னுடைய அதிகாரப்பூர்வமான சமூக வலைதளங்களில் பக்கங்களில் இந்து முன்னணியினர் குறிப்பிடும் பொழுது, "சபரிமலை ஐயப்பன் சேவா சமாஜம் தேசிய அறங்காவலர் துரைசங்கர், இந்து முன்னணி மாநில செய்தி தொடர்பாளர் ஏ.டி.இளங்கோவன் உட்பட இந்து முன்னணி அமைப்பினர் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.


தென் சென்னை மாவட்டம் சாலிகிராமம் பகுதி அகத்தியர் தெருவில் அருள்மிகு வடபழனி முருகர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை கிறிஸ்தவ மிஷனர்களுக்கு தாரை வார்த்து கொடுத்த இந்து சமய அறநிலைத்துறை கண்டித்து நேற்று அகத்தியர் தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது" என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். அருள்மிகு வடபழனி முருகர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை கிறிஸ்தவ மிஷனர்களுக்கு தாரை வார்த்து கொடுத்த இந்து சமய அறநிலைத்துறை கண்டித்து நேற்று அகத்தியர் தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் SG சூர்யா பாஜக மாநிலச் செயலாளர், A.T.இளங்கோவன் மாநில செய்தி தொடர்பாளர், துரைசங்கர் தேசிய அறங்காவலர் சபரிமலை ஐயப்பா சேவா சங்கம் மற்றும் மாநகர மாவட்ட தொகுதி வார்டு கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News