பழனி முருகன் கோவிலில் இந்துக்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதியா.....?

Update: 2023-08-28 04:22 GMT

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்கு தமிழக மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் வருகை தருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகிறார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் படிப்பாதை மின் இழுவை ரோப் கார் மூலம் அடிவாரத்தில் இருந்து மலைக் கோவிலுக்கு சென்று வருகிறார்கள்.


தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பிற மதத்தினர் வருகையை தடுக்க இந்துக்கள் மட்டுமே சில அனுமதி என்ன வசனம் கொண்ட பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதன்படி பழனி முருகன் கோவிலிலும் ரோப் கார் மின் இழுவை வாயில் பகுதியில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி பூரணமும் பணிகள் நடைபெற்றது. இதன் காரணமாக அந்த பேனர் அகற்றப்பட்டது தற்போது மீண்டும் அதே பேனர் வைக்கப்பட்டிருக்கிறது.


பழனி முருகன் கோயில் குறித்து செந்தில்குமார் என்ற பக்தர் இது பற்றி கூறும் பொழுது பழனி முருகன் கோவில் இந்துக்கள் மட்டுமே செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற பெயரில் கூறி மதுரை ஹைகோரட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரித்தல் நீதிமன்றம் பழனி முருகன் கோவிலில் மீண்டும் பேனர் வைக்க உத்தரவிட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News