ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் வரவேற்கத்தக்கது.. டாக்டர் ராமதாஸ் பேட்டி..
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து தற்போது தமிழகத்தின் பாமக கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் 85 வது பிறந்தநாள் தினத்தை ஒட்டி 90 ஜோடிகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் முறைப்படி இந்து திருமணம் நடைபெற்றது தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இந்த ஒரு திருமணம் வெகு விமர்சியாக நடைபெற்றது. 90 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து அவர்களுக்கு ஆசி வழங்கப்பட்டது.
அப்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டாக்டர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்களுக்கு பின் பேட்டி ஒன்று அளித்தார். அதில் இவர் கூறும் பொழுது, 90 திருமணங்கள் நடத்தி வைப்பது எளிதானது அல்ல. இதற்காக மு.க ஸ்டாலினை பாராட்ட வேண்டும். பெண்கள் ஆண்களுக்கு சரி நிகராக உயர வேண்டும் என்று நிலை தற்போது வந்துவிட்டது. இது ஒரு மகிழ்ச்சிக்குரிய நிலையாகும். ஒவ்வொரு மணமகனும் மனைவியை பாராட்ட வேண்டும். இங்குள்ள அனைவரும் பெரிய பணக்காரர்கள் அல்ல உழைப்பாளிகள் வர்க்கம் அனைவரும் உழைத்து உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று ஆசீர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்கள் கேள்வி நேரத்தில் போது, காவிரி பிரச்சினைக்கு தமிழக அரசு சரியான அனைத்து மகிழ்ச்சிகளையும் எடுத்து வருகிறது. பாரத் என்ற பெயர் தேவையில்லை தற்போது உள்ள இந்தியா என்ற பெயரை போதுமானது. அதே நேரத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டமானது மத்திய அரசிடம் இருந்து வரவேற்கத்தக்கத் திட்டம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: News