குடை சாயும் சவுக்கு சங்கர்! பி.கே கும்பல் கட்டியிருந்த பிம்பம் உடைவது தெரிகிறது! சல்லி சல்லியா நொறுக்கப்பட்ட தி.மு.க பர்னிச்சர்!
அதிமுகவுக்கு எதிரான அலை இல்லை. மக்களிடத்தில் வேவ்வும் இல்லை, ஸ்வீப்பும் இல்லை என தீவிர திமுக ஆதரவாளர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
ஆதன் யுடியூப் சேனலுக்கு சவுக்கு சங்கர் அளித்த பேட்டியில், அதிமுக்கு எதிரான வேவ்வோ, ஸ்வீப்போ எதுவும் இல்லை என்கிறார். இதே சங்கர் தான் திமுக நிச்சயம் வெல்லும் என சில வாரங்கள் முன் பேசியிருந்தார்.
நீல சாயம் வெளுத்து போச்சி கதையாக, பிகே கும்பல் கட்டியிருந்த பிம்பம் உடைவது தெரிகிறது. நான் இதுவரை ஒரு 50 பேருக்கும் மேல் பேசியிருப்பேன்.
திருச்சி டூ சென்னை, இளைஞர்கள் டூ சீனியர் சிட்டிசன், வெவ்வேறு சாதி என கொங்கு மண்டலத்தில் கூட பேசினேன். ஒருவர் கூட எடப்பாடி அரசு மோசம், நீக்கப்பட்டே ஆக வேண்டும் என சொல்லவில்லை.
10.5% வன்னியர்களிடம் வரவேற்பை பெறுகிறது. அதே சமயம் பிற சாதியினர் (திருச்சி டூ சென்னை) இடம் எந்த எதிர்ப்பும் தாக்கமும் இல்லை. அவர்களிடம் உங்களுக்கு எதும் அதிருப்தி இல்லையா என கேட்டால், அவங்களுக்கு கொடுத்தா எங்களுக்கென்னா அதை பற்றி என்கிறார்கள்.
திமுக ஊடகங்களின் திட்டமிட்ட சதியால் பாஜக மீது ஒரு சில நெருடல் இருந்தாலும், அது இணையத்தில் திமுகவினர் போடும் சீன் போல அதிமுக-பாமக கூட்டணி எதிர்ப்பாகவெல்லாம் மாறவில்லை. ஆக மக்களின் அமைதியின் விடை மே2 ஆம் தேதி தெரியும் என்கிறார் அரசியல் ஆர்வலர் புருஷோத்தமன்.