தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஏலகிரி மலையும், ஜவ்வாது மலையும் சூறையாடப்படும்!
திமுக ஆட்சிக்கு வந்தால் ஏலகிரி மலையும், ஜவ்வாது மலையும் சூறையாடப்படும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறினார்.
திருப்பத்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், திருப்பத்தூர் தொகுதியில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ள டி.கே.ராஜா ஏற்கனவே 2 முறை எம்எல்ஏவாக இருந்தவர்.
இப்பகுதி மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர். உதவி செய்யும் மனபாங்கு உள்ளவர். திருப்பத்தூர் தனி மாவட்டமாக உருவாக சட்டப்பேரவையில் பலமுறை குரல் கொடுத்தவர்.
மக்களிடம் சகஜமாக பழக்கூடியவர். அவரை யார் வேண்டுமானாலும் எளிதாக அணுகலாம். அவர் வெற்றிப்பெற்றால் இந்தத் தொகுதிக்கு மேலும் பல வளர்ச்சித் திட்டங்களை நிச்சயம் கொண்டு வருவார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் எதுவுமே மிஞ்சாது. இங்குள்ள ஏலகிரி மலையும், ஜவ்வாதுமலையையும் திமுகவினர் சூறையாடிவிடுவார்கள்.
இதுமட்டுமா? திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டம் - ஒழுங்கு கெடும், நில அபகரிப்பு அதிகரிக்கும், வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போகும் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இது போன்ற அவல நிலை வராமல் தடுக்க ஏப்ரல் 6-ம் தேதி வாக்காளர்கள் அதிமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் டி.கே.ராஜாவை ஆதரித்து அக்கட்சியினர் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.