தபால் ஓட்டு அளிக்க காவலர்களுக்கு பணம் வழங்கிய குற்றச்சாட்டு! தி.மு.க சீனியர் கே.என்.நேரு மீது பாயும் சி.பி.ஐ விசாரணை!

Update: 2021-04-01 01:00 GMT

தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு காவல்துறையினருக்கு பணம் வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு தபால் ஓட்டு அளிக்க காவலர்களுக்கு பணம் வழங்கியதாக புகார் எழுந்தது.

இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கை விசாரித்து வந்தனர். பணம் பெற்றதாக கூறப்படும் காவலர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும், திருச்சி மாநகர காவல் ஆணையர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீதான இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும், மாற்றுத் திறனாளிகளும், கரோனா பாதித்தவர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் தான் தபால் மூலம் வாக்களிக்க உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளர்களின் தொகுதி வாரியான பட்டியலை வழங்கக் கோரி நேரு கோரியிருந்தார்.


Similar News