தேர்தல் நெருங்கும் நேரத்தில் சட்ட விரோத செயலில் ஈடுபடும் தி.மு.க! கட்சி தொண்டர்களுக்கு அனுப்பப்பட்ட சீக்ரெட் டாஸ்க்!
தமிழகத்தில் 4 ஆம் தேதி இரவு 7 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்துள்ளது. அதன் பிறகு, "தேர்தல் தொடர்பான சமூக ஊடக பிரச்சாரங்களை வெளியிடக்கூடாது" என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சட்டப்படி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய தேர்தல் சட்டத்தை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு, 4.4.2021 இரவு 7.00 மணிக்கு பின்னரும் சமூக ஊடகங்களில் அதிகாரப்பூர்வமாக தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறது திமுக கட்சி. இதனை ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளார் பாமக கட்சி நிர்வாகி அருள் ரத்தினம்.
திமுக கட்சி அதிகாரப்பூர்வமாக நடத்தும் "திமுக செயல்வீரர்" எனும் செல்பேசி செயலியில் (Seyal Veerar App), ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு 7 மணிக்கு பின்னரும் தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறார்கள்.
இந்த பிரச்சார கருத்துக்களை அனைத்து சமூக ஊடகங்களிலும் பகிர வேண்டும் என திமுக தொண்டர்களுக்கும் உத்தரவிடுகிறார்கள்.
ஆதாரம் 1: 4.4.2021 இரவு 8.05 மணிக்கு திமுக செயலில் அனுப்பப்பட்ட விளம்பரத்தில் "தோல்வியை ஒப்புக்கொண்ட எடப்பாடி" எனும் தலைப்பில் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பேசும் வீடியோ ஒன்றை எடிட் செய்து வெளியிட்டுள்ளார்கள்.
இந்த வீடியோவை அனைத்து சோசியல் மீடியாவிலும் பகிருங்கள் என திமுக தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்கள். இரவு 8.05 மணிக்கு பிறகு, 9.15 மணி வரை இதனை 32 திமுக தொண்டர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.
ஆதாரம் 2: 4.4.2021 இரவு 8.17 மணிக்கு திமுக செயலில் அனுப்பப்பட்ட விளம்பரத்தில் "அவரின் மறைவுக்கு பிறகு" எனும் தலைப்பில் - மு.க.ஸ்டாலின் பேசும் வீடியோ ஒன்றை எடிட் செய்து வெளியிட்டுள்ளார்கள்.
இந்த வீடியோவை அனைத்து சோசியல் மீடியாவிலும் பகிருங்கள் என திமுக தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்கள். 8.17 மணிக்கு பிறகு, 9.15 மணி வரை இதனை 39 திமுக தொண்டர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.