எந்த சின்னத்தை அழுத்தினாலும் ஓட்டு தாமரைக்கே போவதாக தி.மு.க பிரமுகர் கிளப்பிய புரளி!
விருதுநகர் மாவட்டம் சத்திரிய பள்ளி வாக்குச்சாவடியில் எந்தச் சின்னத்தில் வாக்களித்தாலும் பாஜக சின்னம் பதிவாவதாக வாக்காளர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு மின்னணு வாக்கு இயந்திரத்தை அதிகாரிகள் சோதனை செய்தனர். வாக்கு இயந்திரத்தில் குளறுபடி நடப்பதாக வாக்குச்சாவடி அலுவலர்களிடமும் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
புகார் தெரிவித்தவர் திமுக பிரமுகர் என்பது தெரிய வந்தது. பிறகு இயந்திரத்தை அதிகாரிகள் சோதனை செய்த போது, அழுத்திய உதய சூரியனுக்கே ஓட்டு விழுந்ததால், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சின்னம் மாறி ஓட்டு விழுவதாக வந்த குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், சின்னம் மாறி வாக்கு விழுவது தொடர்பாக புகார் வரவில்லை.
நாங்கள் விசாரித்த வரை அதுபோன்ற புகார் எதுவும் வரவில்லை. இவிஎம்மில் எந்த சின்னத்தை அழுத்துகிறீர்களோ அங்குதான் ஓட்டு விழும். சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தது. அனைத்தும் சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது என்றார்.