ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் உலக புகழ்பெற்ற தலமாக விளங்குகிறது. இக்கோயிலுக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வர். இது போன்ற புன்னிய பூமியான ராமநாத சுவாமி கோயிலில் நன்கொடையாக வழங்கப்பட்ட ரூ.1 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மறைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ராமநாத சுவாமி கோயிலுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கத்தில் ருத்ராட்ச மாலை, வைரகற்கள், நெக்லஸ் வழங்கியுள்ளது.
இதனை வாங்கிய கோயில் நிர்வாகள் முறையான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. எவ்வளவு நகைகள் என்று மதிப்பீடு செய்யாமலே பணியாளர்கள் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கோயிலுக்கு வழங்கப்பட்ட நகையை மறைப்பதற்கான முயற்சியாக என்று பக்தர்கள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக பாஜக வழக்கறிஞர் கணேஷ் ஆட்சியர் சங்கர்லால் குமாவத்திடம் மனு ஒன்றையும் அளித்துள்ளார்.
Source, Image Courtesy: Dinamalar