உலகின் நம்பர்-1 செஸ் வீரரை வீழ்த்திய சிறுவன் பிரக்ஞானந்தாவுடன் பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் SG சூர்யா சந்திப்பு!
2018ஆம் ஆண்டு ஜீன் மாதம் இத்தாலியில் நடைபெற்ற Gredine Open சர்வதேச செஸ் போட்டியின் எட்டாவது சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம், கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை தட்டிப் பரித்தார் பிரக்ஞானந்தா. 12 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவிற்கு உலகம் முழுவதும் இந்தியர்கள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். உலகின் மிகப்பெரிய செஸ் வீரராக கருதப்படும் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் தனது 19-வது வயதில் தான் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றார்.
இந்நிலையில் பிரக்ஞானந்தா மற்றும் குடும்பத்தினரை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன், 2018இல் சென்னை வந்திருந்த போது சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார். அடுத்ததாக, உலக சாம்பியன் பட்டம் பெறுவதற்கு கடுமையான பயிற்சி தேவைப்படுவதாகவும், வெளிநாடுகளில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் பங்கு பெறுவதற்கு அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை அவரிடம் வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைகள் குறித்து உடனடியாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோரிடம் பேசி, உடனடியாக பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி ஆகியோருக்கு தேவையான நிதி உதவியை தேசிய விளையாட்டு அபிவிருத்தி நிதியில்(National Sports Development Fund) இருந்து பெற்றுத்தந்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அதன்படி 2018ஆம் ஆண்டு சிறுவன் பிரக்ஞானந்தாவுக்கு ரூபாய் 30 லட்சத்திற்கான காசோலை அப்போதைய மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்டது.
செஸ் போட்டியில் மிக குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா & சிறுவர்களுக்கான உலக செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற வைசாலி அவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையிலும் ₹30 லட்சம் மற்றும் ₹10 லட்சம் ஊக்க தொகை மத்திய அரசால் வழங்கப்பட்டது. pic.twitter.com/t5EiUYflM3
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) October 13, 2018