தூத்துக்குடி: ரூ.10 கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்!

Update: 2022-01-11 02:59 GMT

தூத்துக்குடியில் வெளிநாட்டுக்கு கடத்துவதற்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே உள்ள புதூர்பாண்டியபுரம் சுங்கச்சாவடி அருகாமையில் அமைந்துள்ள ஒரு தனியார் குடோனில் தடை செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசார் தகவல் கிடைத்தது. 


இதனை தொடர்ந்து மாவட்ட எஸ்.பி., உத்தரவின் பேரில் குடோனில் போலீசார் அதிரடியான சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது அங்கு ஒரு லாரி தார்பாய் போர்த்தி மூடப்பட்டிருநுதது. அதனை எடுத்து பார்த்தபோது அதில் 20 டன் செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்த போலீசார், குடோன் மற்றும் லாரி உரிமையாளர்கள் யார் எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News