கேரளா மாவோயிஸ்டுடன் தொடர்பு! தமிழகத்தை சேர்ந்த 10 பேர் மீது என்.ஐ.ஏ வழக்கு - அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்
கேரள மாநிலம், நீலம்பூர் காட்டுப்பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்டு) தொடங்கப்பட்ட தினத்தை முன்னிட்டு கடந்த 2016ம் ஆண்டு தடை செய்யப்பட்ட அக்கட்சியின் கொடியை ஏற்றினர். அது மட்டுமின்றி பல பேருக்கு ஆயுதப்பயிற்சியை மேற்கொண்டனர்.
இவர்களின் செயல் இந்தியா தேசிய ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும் எதிரான நடவடிக்கைகள் என்று கேரள மாநிலம், மலப்புரம், எடக்கரா காவல் நிலையத்தில் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சில மாதங்கள் கழித்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. கொச்சியில் உள்ள பிராந்திய அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது 20 பேருக்கு எதிராக எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. இதில் மட்டும் தமிழகத்தை சேர்ந்த மணி, டேனிஷ், ராகவேந்திரன், சந்தோஷ்குமார், திருவேங்கடம், தினேஷ், கார்த்திக், ரமேஷ், ஐயப்பன், அனிஷ் பாபு உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது.
Source: Dialy Thanthi
Image Courtesy:Quora