தனியாரிடம் கையேந்த அவசியம் இல்லை: தமிழகத்துக்கு 100 கோடி கிலோ நிலக்கரி வழங்கும் மத்திய அரசு!
தமிழக மின்வாரியத்துக்கு 4 ஆயிரத்து 320 மெகாவாட் திறனில் 5 அனல்மின் நிலையங்கள் உள்ளன. தினமும் 7.2 பூஜ்யம் கோடி நிலக்கரி தேவை. இந்த நிலக்கரிகள் அனைத்தும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஒடிசா மாநிலத்தில் உள்ள கோல் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான சுரங்கங்களில் இருந்து வழங்கப்படுகிறது.
தமிழகத்துக்கு 100 கோடி கிலோ நிலக்கரி வழங்கும் மத்திய அரசு! https://t.co/Q7dR4Wpsk3
— Dinamalar (@dinamalarweb) July 24, 2022
இது தவிர மின்வாரியம் கோரிக்கை விடுக்கும் நேரங்களில் ஒடிசாவில் உள்ள பிற சுரங்கங்களில் இருந்தும் நிலக்கரி வழங்கப்படுகிறது. அதன்படி 2021 இறுதியிலும் இந்த ஆண்டின் துவக்கத்திலும் தமிழகத்துக்கு மொத்தம் 100 கோடி கிலோ நிலக்கரி வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.
இதே போன்று செப்டம்பர் முதல் 2023 மார்ச் வரை ஆறு மாதங்களுக்கு மேல் 100 கோடி நிலக்கரியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் தனியாரிடம் இருந்து நிலக்கரி வாங்க வேண்டிய அவசியம் இருக்காது என கூறப்பட்டுள்ளது. பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் இருந்து தமிழகத்துக்கு பல்வேறு நலத்திட்டங்களையும், பல்வேறு வகையிலான உதவிகளையும் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Dinamalar
Image Courtesy:India News Diary