ஸ்டாலின் மாநாடு நடத்திய கோயில் இடம் ரியல் எஸ்டேட் கம்பெனிகள் பிடியில்? 100 ஏக்கரை வளைத்துப்போட திட்டம்!
பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் 100 ஏக்கர் காலி இடம் உள்ளது. சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற பொதுக்கூட்டம், பலுான் திருவிழா அங்கு தான் நடந்தது.
சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு பூஜைகள் நடத்தவும் கும்பாபிஷேகம் விரிவுப்படுத்தும் பணிகளுக்காகவும் 100 ஏக்கர் நிலத்தை ஜமீன் ஆட்சியின் போது தானமாக வழங்கினர்.
அந்த இடத்தைச் சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்வதாக தெரிய வருகிறது.
இதுதொடர்பாக ஜமீன் வாரிசுகள், இந்து சமய அறநிலையத்துறையுடன் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளனர். ரியல் எஸ்டேட் கம்பெனிகள் விற்கும் அந்த இடத்தை யாரும் வாங்கி ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.
கோவிலுக்கு சொந்தமான நிலம் என்பதற்கு ஆவணங்களை எடுத்து வருகிறோம். விரைவில் முழு ஆவணங்கள் சமர்பிக்கப்படும் என்றனர்.
கோவிலுக்கு சொந்தமாக 100 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளது. தற்போது சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிலத்தின் மதிப்பு உள்ளிட்ட முழு விபரங்களும் விரைவில் தெரிவிக்கப்படும் என சுப்ரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர் தேவிப்பிரியா கூறினார்.
Input from: Dinamalar