சென்னையில் பரபரப்பு - 1000 கிலோ குட்கா பறிமுதல்!

Update: 2022-05-19 04:59 GMT

சென்னை ஆர்.கே.நகரில் 12 லட்சம் மதிப்புள்ள 1000 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஒரு சில மாதங்களாக போதைப்பொருட்கள் கடத்தல் சம்பவம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் போதைப்பொருட்கள் கடத்தலை தடுப்பதற்காக டி.ஜி.பி. சைலேந்திரபாபு போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் போலீசார் ஆங்காங்கே சோதனை மேற்கொண்டு கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்தும் அவர்களிடம் இருக்கும் போதைப்பொருட்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை, கொருக்குப்பேட்டை எழில் நகர் சர்வீஸ் சாலை அருகே ஆர்.கே.நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஷேர் ஆட்டோவில் இருந்து மூட்டை, மூட்டையாக பொருட்கள் இறங்கியதை கவனத்தினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது, அதில் தடை செய்யப்பட்ட பாக்கு வகைகள், அன்ஸ் உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அது மட்டுமின்றி அவர்களிடம் இருந்த 1000 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்து அவர்கள் அனைவரையும் கைது செய்தனர். ஒரே நாளில் 1000 கிலோ குட்கா பறிமுதல் செய்துள்ள சம்பவம் சென்னை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் தலைநகரம் போதை நகரமாக மாறுகிறதா என்ற எண்ணமும் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Polimer

Similar News