தூத்துக்குடியில் 11 கோயில்கள் இடிப்பு, மேலும் 50 கோயில்களை இடிக்க சதி திட்டமா? ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்த இந்து முன்னணி!

Update: 2022-04-01 14:08 GMT
தூத்துக்குடியில் 11 கோயில்கள் இடிப்பு, மேலும் 50 கோயில்களை இடிக்க சதி திட்டமா? ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்த இந்து முன்னணி!

திமுக அரசு அமைந்த பின்னர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த இந்து கோயில்கள் இடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதே போன்று தூத்துக்குடி மாநகரில் மட்டும் 11 கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும், 50 கோயில்களை இடிப்பதற்கு சதி திட்டம் போடுவதாக இந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து இந்து முன்னணி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தூத்துக்குடி மாநகரில் 11 கோயில்கள் இடிப்பு, மேலும் 50 கோயில்களை இடிப்பதற்கு சதி திட்டமா? இந்து கோயில்களை மட்டுமே இடிக்கும் மர்மம் என்ன? இந்து கோயில்களை காக்க இந்து முன்னணி அறப்போராட்டம் நடத்துகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வருகின்ற ஏப்ரல் 3ம் தேதி இந்து முன்னணி மாநில செயலாளர் வழக்கறிஞர் கா.குற்றாலநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் இந்துக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Twiter

Image Courtesy: Hindu Tamil

Tags:    

Similar News