முப்படை தலைமை தளபதி, உள்ளிட்ட 13 பேர் உடல்களுடன் விமானம் டெல்லி கிளம்பியது!
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த ஹெலிகாப்டரில் முப்படை ராணுவ தலைமை ஜென்ரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட ராணுவ அதிகாரிகள் 13 பேர் விபத்தில் உயிரிழந்தனர். தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட விமானி தற்போது பெங்களூரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இதனிடையே உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேரின் உடலுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் உயர் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் ஆம்புலன்ஸ் மூலமாக வெலிங்டன் பயிற்சி கல்லூரியில் இருந்து 13 பேரின் உடல்கள் பலத்த பாதுகாப்புடன் கோவை சூலூர் விமானபடை தளத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது வழிநெடுகிலும் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என்று லட்சக்கணக்கானோர்கள் மலர்தூவி தங்களின் இறுதி அஞ்சலியை செலுத்தினர்.
இதன் பின்னர் கோவை சூலூரில் உள்ள விமானப்படை தளத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்து 13 பேரின் உடல்கள் சி130 சூப்பர் ஹெர்குலிஸ் என்ற தனி விமானம் டெல்லிக்கு எடுத்து செல்லப்பட்டது. டெல்லியில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள், முப்படைகளின் அணிவகுப்புடன் நல்லடக்கம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Dinamalar