பொது மக்களுக்கு வழங்க இருந்த இரண்டரை டன் வெல்லம் பாயாசம் போல் உருகியது!
தமிழகத்தில் திமுக அரசு வழங்க பொங்கல் தொகுப்பில் வெல்லத்தை சேர்த்து ரேஷன் அட்டை தாரர்களுக்கு வழங்கி வருகிறது. இருந்தபோதிலும் பல ரேஷன் கடைகளில் வழங்கி வரும் வெல்லம் பாயாசம் போன்று உருகிய நிலையிலேயே பெற்று செல்கின்றனர்.
அதே போன்று திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சாலையில் உள்ள சிவில் சப்ளை குடோனில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் பொங்கல் தொகுப்பில் வெல்லம் உருகி விட்டதாக ஆட்சியர் முருகேசுக்கு தகவல் வந்தது. இதனை தொடர்ந்து ஆட்சியர் முருகேஷ் நேரடியாக ஆய்வு செய்தபோது, 2 ஆயிரத்து 680 கிலோ வெல்லம் உருகிக் கிடந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை உடனடியாக அப்புறப்படுத்திவிட்டு உடனடியாக நல்ல வெல்லத்தை ரேஷன் கடைகளுக்கு அனுப்ப உத்தரவிட்டார்.
இந்த ஆய்வால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இதே போன்ற நிலைமை பல மாவட்டங்களில் உள்ளது. ரேஷன் கடைகளில் பெறப்படுகின்ற வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் பிடித்து செல்லும் நிலையே தொடர்கிறது. பல இடங்களில் இதனை பொதுமக்கள் வாங்காமல் நிராகரித்து செல்கிறது. பொதுமக்களுக்கு வழங்கும் வெல்லத்தை பார்த்து அதிகாரிகள் வாங்க வேண்டாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Source: Dinamalar
Image Courtesy: Vikatan