தேனி: தனிநபர்களின் ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கும் பழமையான இந்து கோயில்கள்! கொதித்தெழுந்த ஊர் பொதுமக்கள்!
தேனி மாவட்டத்தில் பழமையான இந்து கோவில்களை தனிநபர்கள் ஆக்கிரமித்தது, அவ்வூர் மக்களை கொதிப்படையச் செய்துள்ளது.
தெருக்கு ஒரு கோயில், ஊருக்கு ஒரு பெரிய கோயில் இருக்கும் தொன்மையான தமிழகத்தில், பராமரிப்பின்றி தொடர்ந்து பூஜைகள் செய்யப்படாமல் இருக்கும் இந்துக் கோயில்கள் ஏராளமாக உள்ளன. அக் கோயில்களை உள்ளூர்வாசிகள் சிலர் தங்களது சொந்த லாபத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் வரிசையில் தேனி மாவட்டத்தில், சீப்பாலக்கோட்டை என்னும் கிராமத்தில், பழமையான கோயில்களை தனிநபர்கள் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றனர். இது அவ்வூர் மக்களை கொதிப்படையச் செய்துள்ளது. இதனால் ஊர் மக்கள் ஒன்று கூடி "கோயில்களை மீட்டுத்தருமாறு" இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் அவர்களிடம் மனு அளித்துள்ளனர்.
சீப்பாலக்கோட்டை மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து பழமையான கோயில்களையும் தனிநபர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக இருக்கிறது.